செய்திகள்
அரியலூர் எண்ணெய் மில் அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
அரியலூர் எண்ணெய் மில் அதிபர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் பல கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரை சேர்ந்தவர் விக்டர். இவர் அங்கு விக்டர் ஏஜென்சீஸ் என்ற பெயரில் ஆயில் மில் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து குரூடாயில் இறக்குமதி செய்து அதை மில்லில் சுத்திகரிப்பு செய்தும், பாமாயில் விற்பனையும் செய்து வருகிறார்.
அந்த நிறுவனம் மற்றும் அதே வளாகத்தில் உள்ள உரிமையாளர் விக்டர் வீட்டில் நேற்று திருச்சி மண்டல வருமான வரித்துறை துணை இயக்குனர் யாசர் அராபத் தலைமையிலான அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடந்தது.
பின்னர் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள தேசியமய மற்றும் தனியார் வங்கிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்றும் விக்டருக்கு சொந்தமான ஆலை மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விக்டரின் பங்குதாரர்கள் புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனர். அங்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள விக்டர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இதனால் இன்னும் பல்வேறு ஆவணங்கள், சொத்துக்களின் பட்டியல்கள் சிக்க வாய்ப்புள்ளது. மேலும் விக்டருக்கு கைதான தமிழக காண்டிராக்டர் சேகர் ரெட்டியுடன் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது 500, 1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் பல கோடிகளுக்கு மேல் பண பரிவர்த்தனை செய்துள்ளதாக தெரிகிறது. இது போன்று இவருடன் தொடர்புடைய சில முக்கிய நபர்களான தொழிலதிபர்கள், நகைக்கடை மற்றும் துணிக்கடை அதிபர்கள் போன்றவர்களின் பழைய ரூபாய் நோட்டுக்களையும் வாங்கி மாற்றிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விக்டரின் ரகசிய டைரியை கொண்டும், செல்போன்கள் அழைப்பைக் கொண்டும் பல்வேறு தொழிலதிபர்களிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.
மேலும் விக்டருக்கு பல்வேறு பகுதிகளில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பல கோடி மதிப்புள்ள கட்டிடம், ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலையில் பல கோடி மதிப்புள்ள தோட்டம் உள்ளது. தனது நிறுவனத்தின் அருகில் ரூ.3 கோடிக்கும் மேல் மதிப்பிலான நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவும் கட்டி வருகிறார். மேலும் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் பல கோடி மதிப்பிலான இடங்கள் இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

விக்டர் புதிதாக கட்டி வரும் சொகுசு பங்களா.