செய்திகள்

ஜெயலலிதா மரணம்: அதிர்ச்சியில் அ.தி.மு.க. தொண்டர் பலி

Published On 2016-12-09 21:53 IST   |   Update On 2016-12-09 21:53:00 IST
மயிலாடுதுறை அருகே ஜெயலலிதா மரணம் அடைந்த அதிர்ச்சியில் அ.தி.மு.க. தொண்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள ஆத்தூர் உத்திரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 67). அ.தி.மு.க. தொண்டர்.

இவர் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி டி.வி.யில் ஒளிபரப்பானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த அ.தி.மு.க. வினர் முனுசாமி வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Similar News