செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே காட்டுபன்றி தாக்கி 2 பேர் காயம்

Published On 2016-11-18 23:05 IST   |   Update On 2016-11-18 23:05:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே காட்டுபன்றி தாக்கியதில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் ஒசட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாராயணப்பா(48), செல்வராஜ்(32). அந்த பகுதியில் இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாராயணப்பா தனது தோட்டத்தில் மாட்டை மேய்த்து விட்டு வீடு திரும்பினார். அப்போது புதரில் இருந்து காட்டுப்பன்றி ஒன்று வேகமாக வந்து அவரை கடித்து குதறியது.

இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த செல்வராஜ் வந்தார். அவரையும் காட்டு பன்றி கடித்தது. இதில் இருவரும் காயம் அடைந்து வலியால் துடித்தனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு பன்றியை விரட்டி விட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகளால் மட்டுமே அச்சுறுதலாக இருந்து வந்த நிலையில் தற்போது காட்டு பன்றியும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதால் அவர்கள் பீதியில் உள்ளனர்.

Similar News