செய்திகள்
‘100 பெரிதா... 1000 பெரிதா?’ - போதையில் ஆயிரம் ரூபாய் நோட்டை கிழித்த குடிமகன்
டாஸ்மாக்கில் 1000 ரூபாய் நோட்டுக்கு சரக்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த நபர், தன்னிடம் இருந்த 1000 ரூபாய் நோட்டை கிழித்து ஏறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபி:
கடந்த 8-ந் தேதி மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. அதன் பிறகு பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி ரூபாய் 4 ஆயிரம் வரை கடந்த 4 நாட்களாக புதிய 2 ஆயிரம் நோட்டுகளாகவும், மற்றும் 100, 50 ரூபாய் நோட்டுகளாகவும் கால்கடுக்க நாள் முழுவதும் வரிசையில் நின்று மாற்றிச் சென்றவாறு உள்ளனர்.
இந்த நிலையில் கோபியில் ஒரு டாஸ்மாக் கடையில் குடிமகன் ஒருவர் மாலை 5 மணியளவில் 1,000 ரூபாய் நோட்டை எடுத்துச் சென்று சரக்கு கேட்டார். அதற்கு டாஸ்மாக் கடையில் இருந்த ஊழியர் 1,000 ரூபாய் நோட்டை செல்லாது என வாங்க மறுத்து சரக்கு இல்லை என்று சொல்லி விட்டார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றொருவர் 100 ரூபாய் நோட்டு கொடுத்து சரக்கு வாங்கிச் சென்றார்.
இதைப் பார்த்த 1,000 ரூபாய் கொண்டு வந்த குடிமகன் அந்த கடை ஊழியரைப் பார்த்து ரூ.100 பெரிதா? ரூ.1,000 பெரிதா? அவருக்கு மட்டும் ஏன் சரக்கு கொடுக்கிறீர்கள்? எனக்கு தரக் கூடாதா? என கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான் வைத்திருந்த ரூ.1,000 நோட்டை கிழித்து வீசினார். சிறிது நேரத்தில் போதை தெளிந்தவுடன் ரூ.1,000 நோட்டை கிழித்து விட்டோமே என கதறி அழுதார். மற்றவர்கள் இதை பரிதாபத்தோடு பார்த்து சென்றனர்.
பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் நல்ல நிலையில் இருந்தாலே வங்கியில் செலுத்தி மாற்றுவதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில் பழைய 1,000 ரூபாய் நோட்டை குடிமகன் ஒருவர் கிழித்து வீசியது கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.