செய்திகள்

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

Published On 2016-10-25 11:13 IST   |   Update On 2016-10-25 11:13:00 IST
ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு:

வெளளோடு அருகே உள்ள கொம்பனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி வசந்தி (வயது 19).

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம் ஆகி 7 மாதம் ஆகிறது.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வசந்தி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மாரியப்பன் அங்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். இதற்கு வசந்தி மறுத்து விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வசந்தி தற்கொலை செய்வதற்காக சாணிப்பவுடரை (வி‌ஷம்) கரைத்து குடித்தார்.

இதன்பிறகு அவர் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். சத்தம் கேட்டு வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவரை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் வசந்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

வெள்ளோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News