செய்திகள்

குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்: தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Published On 2016-10-18 08:34 GMT   |   Update On 2016-10-18 08:34 GMT
பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை கால தாமதமாகி வருவதால் பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணைக்கு 79 கன அடி தண்ணீரே வருகிறது.

இதனால் நீர்மட்டம் 109.40 அடியாக குறைந்து விட்டது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 600 கன அடி திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது 255 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முதல்போக நெற்பயிர்கள் கதிர் பிடித்துள்ளன. போதிய தண்ணீர் இல்லாததால் அவை கருகி வருகின்றன.

இதுபோல் வைகை அணை நீர்மட்டமும் 23.10 அடியாக குறைந்து விட்டது. வரத்து இல்லாத நிலையில் மதுரை நகர் குடிநீருக்காக மட்டும் 40 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 35.60 அடி. அங்கும் வரத்து இல்லை. தண்ணீர் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 28.86 அடி. வரத்து 7 கன அடி, திறப்பு 3 கன அடி.

Similar News