செய்திகள்

தேசிய அளவிலான யோகாசன போட்டி: தென்காசி பள்ளி மாணவி சாதனை

Published On 2016-09-16 11:51 GMT   |   Update On 2016-09-16 11:51 GMT
தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தென்காசி பள்ளி மாணவி சாதனை புரிந்துள்ளார்.
தென்காசி:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சந்தன்நகரில் இந்தியன் யோக் காண்பிடரே‌ஷன் மற்றும் மேற்கு வங்க மாநிலம் யோகா சங்கம் ஆகியவை சார்பாக தேசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.

16 மாநிலங்களிலிருந்து யோகா மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் பஞ்சாப் அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி இரண்டாம் இடத்தையும், மேற்கு வங்க அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது.

இதில் தென்காசி புனிதமிக்கேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தேவி 12 -15 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒலிம்பிக் யோகா பிரிவில் வெண்கல பதக்கம் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறும் ஆறாவது ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இப்போட்டியில் தாய்லாந்து தொழிலதிபர் கிலோடி மென்சி, தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகச்செயலாளர் மாரியப்பன், தலைவர் மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவியையும் பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் குரு கண்ணனையும் புறநகர் மாவட்ட அ.திமு.க. செயலாளரும், எம்.பி.யுமான பிரபாகரன் பாராட்டி ஆசி வழங்கினார். பள்ளி தாளாளர் புஷ்பம், பள்ளி தலைமை ஆசிரியை மரிய அருள்செல்வி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினார்கள்.

Similar News