சத்தியமங்கலத்தில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பா?: 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் விரைந்தனர்
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலததில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் உள்பட 2 இடங்களில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் பாதிக்கப்பட் டதாகவும் இவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
மேலும் அந்த பகுதியில் சிலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனரிடம் கேட்ட போது கூறியதாவது:-
சத்தியமங்கலம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் நகர் உள்பட 2 இடங்களில் 2 பேர் வைரஸ் காய்ச்சலால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் குணமடைந்து இப்போது வீடு திரும்பி உள்ளனர்.
இருப்பினும் சத்தியமங்கலம் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சென்று முகாமிட்டு உள்ளனர்.
அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் அங்கு தேங்கி உள்ள மழை தண்ணீரை அகற்றுவது, கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது மற்றும் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.