செய்திகள்

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் ஐகோர்ட்டில் மனு

Published On 2016-08-19 09:41 IST   |   Update On 2016-08-19 09:48:00 IST
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மதுரை:

கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசி உள்ளார். அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தஞ்சாவூர் கோர்ட்டில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அரசு வக்கீல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தஞ்சாவூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்கு விசாரணைக்காக தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Similar News