செய்திகள்

காமன்வெல்த் சதுரங்க போட்டி: தங்கம் வென்ற பள்ளி மாணவனுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2016-08-18 11:12 GMT   |   Update On 2016-08-18 11:12 GMT
காமன்வெல்த் சதுரங்க போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவனுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஈரோடு, இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவன் இனியன் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவரது தந்தை பெயர் பன்னீர்செல்வம், தாயார் பெயர் சரண்யா. மேலும் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவி தர்‌ஷனா வெண்கல பதக்கம் வென்று முத்திரை பதித்தார். இவரது தந்தை சக்திவேல், தாயார் பானு.

சாதனை படைத்த மாணவன் இனியனை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இதே போன்று மாணவி தர்‌ஷனாவையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ஈரோடு சதுரங்க சர்க்கிள் செயலாளர் ரமேஷ் உடன் இருந்தார்.

Similar News