செய்திகள்
திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழா: தடையை மீறி மஞ்சு விரட்டு - 6 பேர் கைது
திருப்பத்தூர் அருகே உள்ள பரியாமருதுபட்டியில் சேவுகப்பெருமாள் கோவில் திருவிழாவையொட்டி நேற்று தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், நெற்குப்பை அருகே உள்ள பரியாமருதுபட்டியில் பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆனித்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம் என்ற நிலையில் கோர்ட்டு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடக்காமல் இருக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று பரியாமருதுபட்டியை சுற்றி உள்ள துவார், கருப்புக்குடி, நெற்குப்பை, புரந்தனன்பட்டி, கருமிச்சான்பட்டி, செல்லியம்பட்டி, பிரான்மலை, சிங்கம்புணரி, ஆலம்பட்டி, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு அந்த பகுதியில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
அங்கு திரண்டு இருந்த வாலிபர்களும், கிராம மக்களும் காளைகளை விரட்டிச் சென்று அடக்க முயன்றனர். இதில், ஒருசில காளைகள் மட்டுமே பிடிபட்டன. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தபோதும், திடீரென காளைகள் வயல் பகுதிகளிலும், கண்மாய் பகுதிகளிலும், ஆற்றுப் பகுதிகளிலும் அவிழ்த்து விடப்பட்டதால் போலீசாரால் அதனை தடுக்க முடியாமல் திணறினர்.
இதுகுறித்து நெற்குப்பை போலீசார் தடையை மீறி காளைகளை அவிழ்த்து விட்டதாக பொட்டபட்டியைச் சேர்ந்த பிரபு(வயது24), சூரப்பட்டி குமார்(22), புழுதிபட்டி ரமேஷ்(38), சிங்கம்புணரி செழியன்(37), நச்சாந்துபட்டி பாண்டி(36), கோட்டூர் முருகேசன்(30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.