செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் இடியுடன் மழை

Published On 2016-06-19 10:06 IST   |   Update On 2016-06-19 10:06:00 IST
டெல்டா மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது.

தஞ்சாவூர்:

தஞ்சையில் நேற்று பகலில் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. முதலில் 2 மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. பின்னர் படிபடியாக மழை வேகம் குறைந்து தூறலாக இரவு 9 மணி வரை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெப்பம் தணிந்து இரவு குளிர்ந்த காற்று வீசியது.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், பூதலூர், கும்பகோணம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. தஞ்சையில் பெய்த மழைக்கு பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய அரசு குடியிருப்பில் வேப்பமரத்தின் கிளை முறிந்து விழுந்தத.

திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று மாலை பலத்த மழை செய்தது. திருத்துறைப்பூண்டியில் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது. முத்துப்பேட்டையில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காற்றும் பலமாக வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. திருவாரூர், நீடாமங்கலம், கொடராச்சேரி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

நாகையில் நேற்று இரவு 10 மணி முதல் 1 மணி நேரம் மழை பெய்தது. வேதாரண்யம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய இடங்களிலும் தூறல் மழை பெய்தது. இந்த மழை உளுந்து, கடலை, எள் போன்ற பயிர்களுக்கு ஊட்டமாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

தஞ்சாவூர் – 76

வேதாரண்யம் – 2

Similar News