செய்திகள்
சிங்கம்புணரி அருகே கைலாசநாதர் கோவிலில் 11 சாமி சிலைகள் சேதம்: போலீசார் விசாரணை
சிங்கம்புணரி அருகே கைலாசநாதர் கோவிலில் இருந்த 11 சாமி சிலைகளை பெயர்த்து எடுத்து சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள புதூர் யூனியனுக்குட்பட்டது கரிசல்பட்டி கிராமம். இங்கு 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு நேரத்தில் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கோவிலில் இருந்த பைரவர் சிலை, நவக்கிரக சிலைகள், நாகராஜர் சிலை ஆகியவற்றை பெயர்த்து எடுத்து சேதப்படுத்தினர். பின்னர் அந்த கும்பல் சிலைகளின் அடியில் வைக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை திருடி சென்றனர்.
இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி, சிலைகள் பெயர்த்து எடுத்து ஆங்காங்கே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளின் அடியில் வைக்கப்பட்டு இருக்கும் தங்க தகடுகளை திருடும் நோக்கத்தில் மர்ம கும்பல் இச்செயல்களில் ஈடுபட்டதா? அல்லது சாமி சிலைகளை அவமரியாதை செய்யும் நோக்கில் செயல்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.