செய்திகள்

497 மதிப்பெண் எடுத்து இன்ஸ்பெக்டர் மகள் 3-வது இடம்

Published On 2016-05-25 12:46 IST   |   Update On 2016-05-25 12:46:00 IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் எடுத்து இன்ஸ்பெக்டர் மகள் சுவேதா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
திருநின்றவூர்:

திருநின்றவூர், கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜெயா மெட்ரிக்பள்ளி மாணவி சுவேதா 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்தார். அவர் எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ் - 99
ஆங்கிலம் - 98
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூகஅறிவியல் - 100

சாதனை படைத்த மாணவி சுவேதாவை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர் அவரது பெற்றோர் தேசிகன் - பிரியா, திருநின்றவூர் தாசர்தெருவில் வசித்து வருகிறார்கள்.

தேசிகன் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவரது மற்றொரு மகன் அஸ்வின் அதே பள்ளியில் 11-ம் வகுப்பும், மகள் ஹரிதா யூ.கே.ஜி-ம் படித்து வருகிறார்கள்.

சாதனை படைத்தது குறித்து சுவேதா கூறும்போது, ‘மாநில அளவில் 3-வது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி. கம்யூட்டர் என்ஜினியர் ஆக எனக்கு ஆசை’ என்றார்.

Similar News