செய்திகள்

சிங்கபெருமாள்கோவில் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2016-05-24 04:10 IST   |   Update On 2016-05-24 04:10:00 IST
சிங்கபெருமாள்கோவில் அருகே பஸ் மோதி வாலிபர் பலியானார்.
வண்டலூர்:

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்யகிஷோர்(வயது 25). இவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சத்யகிஷோர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News