செய்திகள்
காங்கிரசுடன் சேர்ந்ததால் தி.மு.க. தோல்வியை தழுவியது: முரளிதரராவ் பேட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்ததால் தி.மு.க. தோல்வியை தழுவியது என பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி இந்த அளவுக்கு தோல்வியை பெறும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் சென்னை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பா.ஜனதாவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வியை தழுவியுள்ளது. பா.ஜனதாவில் மிஸ்டுகால் மூலம் 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 12 லட்சம் பேரே பா.ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர்.
காங்கிரசை தி.மு.க. கூட்டணியில் சேர்த்தது பிடிக்காததால் நாங்கள் சேர்த்த மிஸ்டுகால் உறுப் பினர்கள் காங்கிரசை தோற்கடிக்க அ.தி.மு.க.வுக்கு வாக்களித்திருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறேன்.
மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து வகை யான ஒத்துழைப்பையும் அளிக்கும். முதல்வராக பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.