செய்திகள்

உடுமலையில் காரில் வந்த வாலிபரிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

Published On 2016-05-07 10:45 IST   |   Update On 2016-05-07 10:45:00 IST
உடுமலையில் காரில் வந்த வாலிபரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

உடுமலை, மே.7–

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் வாக் காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யக்கூடும் என்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் சோதனை சாவடி களில் அனைத்து வாகனங் களையும் பறக்கும் படையினர், கண்காணிப்பு நிலை குழுவினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகி றார்கள்.

இந்த நிலையில் உடுமலை அருகே புதுப்பாளையம் கிராமத்தில் நேற்று மாலை தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சிவக்குமார் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.39 லட்சத்து 20 ஆயிரம் பணம் இருந்தது.

இதனால் கண்காணிப்பு குழுவினர், காரில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கோவை போத்தனூர் சத்தியசாய்நகர் பகுதியை சேர்ந்த மதுஷா என்று தெரிய வந்தது.

மேலும் அவரிடம் இருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதைதொடர்ந்து மதுஷா கொண்டு வந்த ரூ.39 லட்சத்து 20 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உடுமலை ஆர்.டி.ஓ. சாதனை குறளிடம் ஒப்படைக்கப்பட்டது. * * * கோவையில் ராகுல்காந்தி பேசும் மேடை முன்பு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. * * * கோவை–01 * * * பறிமுதல் செய்த பணத்தை படத்தில் காணலாம். * * * கோவை–02

Similar News