செய்திகள்

ஊத்துக்கோட்டையில் காற்றுடன் திடீர் மழை

Published On 2016-04-25 11:10 IST   |   Update On 2016-04-25 11:10:00 IST
ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த பலத்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

சூறை காற்றால் புதுகுப்பம், நரசாரெட்டி கண்டிகை, ஆம்பாக்கம், பேரடம், சுப்பாநாயுடு கண்டிகை, காரணி, வெள்ளாத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மாந்தோப்புகளில் மாங்காய்கள் விழுந்ததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர்.

பல மரங்களில் கிளைகள் உடைந்தன. சுட்டெரிக்கும் வெயிலில் அவதிபட்டு வந்த ஊத்துக்கோட்டை நகர வாழ் பொது மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடந்தனர்.

Similar News