விளையாட்டு
செஸ் உலகக் கோப்பை: 3வது சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- மூன்றாவது சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் குகேஷும், ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனும் மோதிக்கொண்டனர்..
இருவருக்குமான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் ஃபிரெடிரிக் ஸ்வேனே குகேஷை வீழ்த்தினார் . இதனால் மூன்றாவது சுற்றிலேயே குகேஷ் தொடரிலிருந்து வெளியேறினார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.