விளையாட்டு
சையத் மோடி பேட்மிண்டன்: உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா அரையிறுதிக்கு முன்னேற்றம்
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ரக்ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-15, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 21-13, 21-19 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையான லோ சின் யானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.