விளையாட்டு
China Open Badminton: இந்தியாவின் உன்னதி ஹூடா முதல் சுற்றில் வெற்றி
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் உன்னதி ஹூடா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-11, 21-16 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் உன்னதி ஹூடா, பி.வி.சிந்துவை எதிர்கொள்கிறார்.