அமெரிக்க ஓபன்: வீரர் சிறுவனுக்கு கொடுத்த தொப்பியை பறித்த போலந்து நிறுவன சிஇஓ- வைரலாகும் அவர் அளித்த விளக்கம்..!
- சிறுவனுக்கு வீரர் வழங்கிய தொப்பியை பறித்த சிஇஓ.
- சமூக வலைத்தளத்தில் விமர்சன கருத்துகள் எழுந்ததால் வினோத விளக்கம்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் போலந்து நாட்டைச் சேர்ந்த கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக் விளையாடிய ஆட்டத்தை, போலந்து நாட்டின் ட்ரோக்ப்ருக் நிறுவனத்தின் சிஇஓ பியோட்ர் ஸ்செரேக் உள்பட பலர் பார்த்து ரசித்தனர்.
போட்டியில் கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக் வெற்றி பெற்றதும், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கினார். அப்போது தான் அணிந்திருந்த தொப்பியில் சிறுவன் ஒருவனுக்கு வீரர் தன்னுடைய கையெழுத்திட்டு வழங்குவார். சிறுவன் தொப்பியை பெறுவதற்குள் அருகில் நிற்கும் ஸ்செரேக் அதை பறித்து விடுவார். அத்துடன், அருகில் இருக்கும் தன்னுடைய பார்ட்னரின் பையில் வைத்து விடுவார்.
அந்த சிறுவன் ஏக்கத்துடன் தொப்பி பறிபோனதை பார்ப்பான். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஒரு நிறுவனத்தின் சிஇஓ இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? என நெட்டிசன்கன் அவரை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர்.
இந்த நிலையில் ஸ்செரேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தொபியை வைத்து உலகளாவிய மோசடியை உருவாக்க வேண்டாம். ஆட்சேபைனக்குரிய வகையில் கருத்து பதிவிட்டவர்கள் மீது வழக்கு தொடுப்பேன்" எனக் கூறியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.