டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இரட்டையரிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஜாஸ்மின் பவுலினி

Published On 2025-05-19 02:45 IST   |   Update On 2025-05-19 02:45:00 IST
  • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.
  • இறுதிச்சுற்றில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, ஜெர்மனியின் எலைஸ் மெர்டன்ஸ்- ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய பவுலினி ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News