பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மேடிசன் கீஸ், கோகோ காப்: பெகுலா அதிர்ச்சி தோல்வி
- ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் வெற்றி பெற்றார்.
- பெண்களுக்கான 4-வது சுற்றில் மேடிசன் கீஸ், கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.
இதில் அலெக்சாண்டர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2-வது செட் 3-0 என்ற செட் கணக்கில் இருக்கும் போது டாலன் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அலெக்சாண்டர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர். இதில் முதல் செட்டை பெகுலா கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்டுகளை போய்சன் வென்று பெகுலாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மற்றொரு ஆட்டங்களில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கோகோ காப் (அமெரிக்கா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) ஆகிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.