டென்னிஸ்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பெர்க்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெற உள்ள அரையிறுதியில் ஜோகோவிச், மொனாக்கோவின் வேலண்டின் வச்ராட் உடன் மோதுகிறார்.