டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய கோகோ காப், இகா ஸ்வியாடெக்

Published On 2025-08-14 22:33 IST   |   Update On 2025-08-14 22:33:00 IST
  • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரொமானியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப்6-2, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூசியா பிரான்செட்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News