டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்.. கரோலினா அதிர்ச்சி தோல்வி

Published On 2025-08-13 13:43 IST   |   Update On 2025-08-13 13:43:00 IST
  • கரோலினா 2-6, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
  • உக்ரைன் வீராங்கனை போட்டியில் இருந்து விலகியதையடுத்து கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் லூசியா ப்ரோனெட்டி (இத்தாலி) மற்றும் ஜெலினா ஓஸ்டாபென்கோ லாட்வியா மோதினர். இந்த ஆட்டத்தில் லூசியா ப்ரோனெட்டி 1-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டங்களில் கரோலினா முச்சோவா (செக்), வர்வாரா கிராச்சேவா (ரஷ்யா) ஆகியோர் மோதினர். இதில் கரோலினா 2-6, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மற்றொரு ஆட்டங்களில் கோகோ காப் -டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா (உக்ரைன்) ஆகியோர் மோத இருந்த நிலையில் உக்ரைன் வீராங்கனை போட்டியில் இருந்து விலகியதையடுத்து கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News