டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: ஷெல்டன்- டெய்லர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-08-06 14:17 IST   |   Update On 2025-08-06 14:17:00 IST
  • ஷெல்டன் ஆஸ்திரேலிய வீரரையும், டெய்லர் ரஷ்ய வீரரையும் வீழ்த்தினர்.
  • அரையிறுதி ஆட்டத்தில் ஷெல்டன்- டெய்லர் ஃபிரிட்ஸ் நாளை மோதுகின்றனர்.

டொரன்டோ:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினௌர் (ஆஸ்திரேலியா) மற்றும் பெஞ்சமின் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் ஷெல்டன் 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா) மற்றும் ஆண்ட்ரி ரூப்லேவ் (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-3, 7-6 (7-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அரையிறுதி ஆட்டத்தில் ஷெல்டன்- டெய்லர் ஃபிரிட்ஸ் நாளை மோதுகின்றனர்.

Tags:    

Similar News