டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி.. அரையிறுதியில் ஒசாகா
- காலிறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.
- மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 1-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் நவோமி ஒசாகா (ஜப்பான்) மற்றும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற கணக்கில் ஒசாகா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா) மற்றும் கிளாரா டௌசன் (டென்மார்க்) ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் மேடிசன் கீஸ் 1-6, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கிளாரா அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை கிளாரா டௌசனுடன் ஜப்பான் வீராங்கனை ஒசாகா மோதவுள்ளார்.