டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: அரையிறுதி ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி- இறுதிப்போட்டியில் பென் ஷெல்டன்

Published On 2025-08-07 15:26 IST   |   Update On 2025-08-07 15:26:00 IST
  • பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
  • முதல் செட்டை கரேன் கச்சனோவும் 2-வது செட்டை ஸ்வரேவும் கைப்பற்றினார்.

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பென் ஷெல்டன் (அமெரிக்கா) மற்றும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷ்யவை சேர்ந்த கரேன் கச்சனோவ் மோதினர்.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை கரேன் கச்சனோவும் 2-வது செட்டை ஸ்வரேவும் கைப்பற்றினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை கரேன் கைப்பற்றி அசத்தினார். இதனால் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கரேன் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News