டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-செக் வீரர் ஆடம் பவ்லாசெக் ஜோடி,
பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரீபோல் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 6-7 (2-7), 7-6-(7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஏற்கனவே இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.