விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி

Published On 2024-11-19 14:41 IST   |   Update On 2024-11-19 14:41:00 IST
  • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
  • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஷென்ஜென்:

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, அமெரிக்காவின் பிரெஸ்லி-ஜென்னி ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 23-21, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News