விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறிய பிரனோய்
- ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரனோய், ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார்.
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனோய், டென்மார்க் வீரரான ராஸ்மஸ் கெம்கேவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் பிரனோய் முதல் செட்டில் தோல்வியடைந்தார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட பிரனோய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதனால் 19-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.