விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-05-22 15:38 GMT   |   Update On 2024-05-22 15:38 GMT
  • பிவி சிந்து 21-17, 21-16 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
  • இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 46 நிமிடங்கள் தேவைப்பட்டது.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த கிர்ஸ்டி கில்மவுரை எதிர்கொண்டார்.

இதில் உலகக் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-17, 21-16 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவுக்கு 46 நிமிடங்களே தேவைப்பட்டது. அடுத்த சுற்றில் கொரிய வீராங்கனை சிம் யு ஜின்-ஐ எதிர்கொள்கிறார்.

பிவி சிந்து கடைசியாக 2022-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிவி சிந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வீராங்கனை அஷ்மிதா சலியா முதல் சுற்றில் சீன தைபேயின் சிஹ் யுன் லின்-ஐ 21-17, 21-16 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.

உன்னாதி ஹூடா, ஆகாஸ்ஸ்ரீ காஷ்யப் முதல் சுற்றில் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜ் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி- என். சிக்கி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Tags:    

Similar News