விளையாட்டு

2011-ல் சச்சின் டெண்டுல்கர்.... 2022-ல் லியோனல் மெஸ்சி... கொண்டாடிய ரசிகர்கள்

Published On 2022-12-19 10:31 GMT   |   Update On 2022-12-19 10:31 GMT
  • அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
  • உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய கோஷங்களுடன் மகுடத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி. நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்த இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.

இந்த போட்டியில் அர்ஜெண்டினா கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததை விட, எப்படியாவது லியோனல் மெஸ்சி வென்றுவிட வேண்டும் என்று தான் கடும் பிரார்த்தனையில் இருந்தனர். இதற்கு காரணம் மெஸ்சி விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருந்திருப்பது தான். இதனை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

சுமார் 18 ஆண்டுகளாக கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் மெஸ்சிக்கு இந்த உலகக்கோப்பையில் சாதனைகளும் குவிந்தன. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மெஸ்சியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும் அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது லட்சியம் நிறைவேறியிருந்தது. இதே போன்ற சூழல் தான் இன்று மெஸ்சிக்கும் நிறைவேறியுள்ளது.

இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, இன்று அர்ஜெண்டினாவின் 36 ஆண்டு கால கனவு லியோனல் மெஸ்சிக்காக நிறைவேறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News