விளையாட்டு

வரலாறு படைத்த ஜமைக்கா வீராங்கனை ஒலிம்பிக்கில் இருந்து விலகல்

Published On 2024-06-28 07:19 IST   |   Update On 2024-06-28 07:19:00 IST
  • கடந்த இரு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
  • அதிவேக பெண்மணியாக வலம் வரும் 31 வயதான தாம்சன் ஹெரா பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.

கிங்ஸ்டவுன்:

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை எலைன் தாம்சன் ஹெரா, கடந்த இரு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். அதிவேக பெண்மணியாக வலம் வரும் 31 வயதான தாம்சன் ஹெரா பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.

பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் அவருக்கு தசைநாரில் லேசான கிழிவும் ஏற்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கை தவற விடுவது மிகுந்த வேதனை அளித்தாலும், இறுதியில் விளையாட்டை விட உடல்ஆரோக்கியமே முக்கியம் என்று ஹெரா குறிப்பிட்டார்.

Tags:    

Similar News