விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து தோல்வி- பிரனோய் இறுதிப்போட்டிக்கு தகுதி

Update: 2023-05-27 11:28 GMT
  • இந்தியாவின் பிரனோய் , இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார்.
  • அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார்.

கோலாலம்பூர்:

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனோய், இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முதல் சுற்றை பிரனோய் கைப்பற்றினார். பின்னர் காயம் காரணமாக கிறிஸ்டியன் அடினாடா போட்டியிலிருந்து விலகினார். இதனால் இந்தியாவின் பிரனோய் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 14 -21 , 17 -21 என்ற கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.

Tags:    

Similar News