ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 9.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா பிலிப்பைன்ஸ் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மல்யுத்தம் பெண்கள் ப்ரீ ஸ்டைல் 76 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் கிரண் ஜப்பானிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மல்யுத்தம் பெண்கள் ப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் மங்கோலிய வீராங்கனையை விழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
செபக்டக்ரா போட்டியின் பெண்கள் ரெகு பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மல்யுத்தம் பெண்கள் ப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் காலிறுதிக்கு முன்னேறினார்.
வில்வித்தை பெண்கள் ரிகர்வ் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் கொரியாவிடம் 2-6 என தோல்வி அடைந்தது.
முதலாவது அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற 97 ரன்களை நிர்ணயித்தது வங்காளதேசம்.
மல்யுத்தம் ஆண்கள் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் 6-1 என கொரிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.