விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-06 06:40 GMT

பேட்மிண்டன் ஆண்கள் அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீன வீரருடன் மோதினார். இதில் சீனா 2-0 என நேர் செட்களில் வென்றது.

2023-10-06 06:29 GMT

வில்வித்தையில் ஆண்கள் ரிகர்வ் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா மற்றும் துஷார் பிரபாகர் ஆகியோர் மங்கோலிய அணியுடன் மோதி வருகின்றனர்.

2023-10-06 06:17 GMT

பேட்மிண்டன் ஆண்கள் அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீன வீரருடன் மோதி வருகிறார். இதில் சீனா 21-16 என முதல் செட்டை கைப்பற்றியது.

2023-10-06 05:40 GMT

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

2023-10-06 05:27 GMT

மல்யுத்தம் போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக், பஜ்ரங் புனியா, அமன் ஷெராவத், கிரண் ஆகியோர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளனர்.

2023-10-06 05:23 GMT

மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரான் வீரரிடம் 8-1 என தோல்வி அடைந்தார்.

2023-10-06 05:13 GMT

மல்யுத்தம் பெண்கள் ப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சோனம் மாலிக் கொரிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

2023-10-06 04:39 GMT

மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா பஹ்ரைன் வீரரை 4-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-06 04:24 GMT

மல்யுத்தம் பெண்கள் ப்ரீ ஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ராதிகா, மங்கோலிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

2023-10-06 04:05 GMT

மல்யுத்தம் ஆண்கள் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் 19-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News