ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
பெண்கள் கபடி இறுதிப்போட்டி - முதல் பாதியில் இந்தியா 14-9 என முன்னிலை
3வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் மோதல் - மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
வில்வித்தை பெண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலப் பதக்கம் வென்றார்.
பிரிட்ஜி ஆண்கள் குழு இறுதிப்போட்டியில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் 17-12 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஹாங்காங் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
மல்யுத்தம் ஆண்கள் ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா- ஜப்பான் மோதியது. இதில், 10-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஜப்பான் வென்றது. இதன்மூலம் ஜப்பான் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
மல்யுத்தம் ஆண்கள் ப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா- சீனா மோதியது. இதில், 11-0 என்ற புள்ளி கணக்கில் சீன வீரர் லியு மிங்குவை வீழ்த்தி இந்திய வீரர் அமென் செரவத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில், 3ம் பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதியுள்ளன. இதன் 2ம் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.