விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-07 04:54 GMT

வெண்கலப் பதக்கத்துக்கான கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம் பாகிஸ்தானை வீழ்த்தியது.

2023-10-07 04:22 GMT

மழை குறுக்கிட்டதால் வங்காளதேசம் வெற்றிபெற 5 ஓவரில் 65 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-10-07 04:12 GMT

மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தீபக் புனியா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-07 04:07 GMT

மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 74 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யாஷ் தோல்வி அடைந்தார்.

2023-10-07 03:56 GMT

ஜூ ஜிட்சு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனை தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

2023-10-07 03:46 GMT

கேனோ ஸ்லாலோம் ஆண்கள் கயாக் அரையிறுதியில் இந்தியாவின் ஹிதேஷ் கேவட் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

2023-10-07 03:27 GMT

பாகிஸ்தான் 5 ஓவரில் 48/1. மழையால் ஆட்டம் நிறுத்தம்

2023-10-07 03:08 GMT

மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 74 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் யாஷ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-07 03:04 GMT

3வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

2023-10-07 02:41 GMT

கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

Tags:    

Similar News