விளையாட்டு
LIVE

ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-09-23 06:42 IST   |   Update On 2023-10-07 16:38:00 IST
2023-10-01 05:14 GMT

பெண்கள் கேனோ ஒற்றையர் 200 மீட்டர் பிரிவில் மேகோ பிரதீப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-01 05:10 GMT

செபக்டக்ரா: பெண்களுக்கான (4 பேர்) தொடக்க சுற்றில் (குரூப்-பி) இலாவோசு அணியிடம் இந்தியா 0-2 என தோல்வியடைந்தது.

2023-10-01 05:06 GMT

குதிரையேற்றம்: கிராஸ் கன்ட்ரி சுற்றில் இந்திய வீரர் அபூர்வா கிஷோர் 6-வது இடத்தை பிடித்தார். விகாஷ் குமார் 11-வது இடத்தை பிடித்தார்.

2023-10-01 05:04 GMT

ஈட்டி எறிதலில் சோப்னா பர்மன் 5-வது இடத்தையும், ஆகாசாரா 9-வது இடத்தையும் பிடித்தனர்.

2023-10-01 05:01 GMT

கோல்ஃப் : பெண்களுக்கான ரவுண்ட் 4-ல் இந்திய அணி 4-வது இடத்தை பிடித்தது.

2023-10-01 04:39 GMT

துப்பாக்கி சுடுதல் ட்ராப் ஆண்கள் இறுதி போட்டிக்கு கைனன் டாரியஸ் சனாய், சோரவர் சிங் சந்து ஆகியோர் முன்னேறினர். இறுதி போட்டி 1 மணிக்கு நடைபெறுகிறது. அதே பிரிவில் பெண்கள் இறுதி போட்டிக்கு மனிஷா கீர் தகுதி பெற்றுள்ளார்.

2023-10-01 04:32 GMT

துப்பாக்கி சுடுதல் ட்ராப் ஆண்கள் அணியில் இந்தியா தங்கம் வென்றது.

2023-10-01 04:22 GMT

துப்பாக்கி சுடுதல் ட்ராப் 50 ஸ்பேஸ் 2 பெண்கள் பிரிவில் இந்தியா அணி வெள்ளி வென்றது. ப்ரீத்தி ராசாக், மனிஷா கீர், குமாரி ராஜேஷ்வரி ஆகிய வீராங்கனைகள் 337 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றது. சீன அணி 355 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. கஜகஜஸ்தான் அணி வெண்கலம் வென்றது.

2023-10-01 04:07 GMT

கோல்ஃப் : பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆதித்தி அசோக் வெள்ளி வென்றார்.

2023-10-01 04:05 GMT

குராஷ்: ஆண்கள் 81 கிலோ பிரிவில் ஆதித்யா தோபாகர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார்.

Tags:    

Similar News