ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 50/4.
ஆப்கானிஸ்தான் 4வது விக்கெட்டை வீழ்த்தினார் ரவி பிஷ்னோய்.
ஆப்கானிஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 16/3.
ரன் அவுட் முறையில் ஆப்கானிஸ்தானின் 3வது விக்கெட் வீழ்ந்தது. 12/3
ஆப்கானிஸ்தான் 2வது விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்.
ஆப்கானிஸ்தான் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் ஷிவம் துபே.
தங்கத்துக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் - டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு
தங்கப் பதக்கத்துக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் - ஈரப்பதமான மைதானத்தால் டாஸ் போடுவதில் தாமதம்
ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஆர்டிஸ்டிக் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் லாங் புரோகிராம் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய் சும்கிதா 4ம் இடமும், கிரிஷ்மா 6ம் இடமும் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.
மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 86 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தீபக் புனியா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.