விளையாட்டு
ஜப்பான் பேட்மிண்டன்- முன்னாள் சாம்பியனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்
- காலிறுதி சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், முன்னாள் சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுற்றுப்பயணத்தில் தனது முதல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.