விளையாட்டு

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்தியர்கள் ஏமாற்றம்

Published On 2025-08-02 23:17 IST   |   Update On 2025-08-02 23:17:00 IST
  • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

மக்காவ்:

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஆல்வின் பர்ஹான் உடன் மோதினார்.

இதில் 16-21, 9-21 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு அரையிறுதியில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி மலேசியாவின் ஜஸ்டின் ஹோவிடம் வீழ்ந்தார்.

Tags:    

Similar News