விளையாட்டு
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரான்சின் டோமா ஜுனியர் பாபோவ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய கிடாம்பி 24-22, 17-21, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் கிடாம்பி, ஜப்பான் வீரர் யுஷி தனகாவுடன் மோதுகிறார்.