விளையாட்டு

வில்வித்தை உலக் கோப்பை: பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை- ஜோதி சுரேகா சாதனை

Published On 2025-10-18 16:29 IST   |   Update On 2025-10-18 16:29:00 IST
  • இந்திய வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • இது அவரது முதல் உலகக் கோப்பை பதக்கமாகும்.

வில்வித்தை உலகக் கோப்பை போட்டி சீனாவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் 8 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய வீராங்கனையான ஜோதி சுரேகா வென்னம் கலந்து கொண்டார். பரபரப்பான இந்த போட்டியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இது அவரது முதல் உலகக் கோப்பை பதக்கமாகும். இதன் மூலம் உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற முதல் நபராகவும் அவர் வரலாறு படைத்துள்ளார்.

ஜோதி இதற்கு முன் 2022 (Tlaxcala) மற்றும் 2023 (Hermosillo) இறுதிப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News