விளையாட்டு
சர்வதேச டேபிள் டென்னிஸ்: ஹர்மித் - யஷஸ்வினி ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி
- சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சத்யன் கால்இறுதியில் தோற்றார்.
2-வது ஸ்டார் கன்டென்டர் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிசென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்- யஷஸ்வினி கோர்படே ஜோடி 3-0 (11-9, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஹர்மீத் தேசாய்-யஷஸ்வினி கோர்படே ஜோடி இறுதிப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் எட்வர்ட் ஐயோனெஸ்கு-பெர்னாடெட் ஸாக்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சத்யன் கால்இறுதியில் தோற்றார். அவர் செக்குடியரசை சேர்ந்த லுபோமிர்ரிடம் 6-11, 8-11, 11-13 என்ற செட் கணக்கில் தோற்றார்.