விளையாட்டு

காமன்வெல்த் 2030.. அகமதாபாத்தில் நடத்த ஒப்புதல்: இந்திய ஒலிம்பிக் சங்கம்

Published On 2025-08-13 16:04 IST   |   Update On 2025-08-13 16:04:00 IST
  • இந்தியா இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் தொடரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
  • 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

டெல்லி:

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் தொடரை நடத்த கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், திடீரெனப் போட்டியிலிருந்து விலகியது. இது இந்தியாவுக்குப் காமன்வெல்த் தொடரை நடத்தும் வாய்ப்பை அதிகரித்தது.

இந்தியா இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் தொடரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரம்மாண்ட விளையாட்டு தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News