விளையாட்டு
null

சர்வதேச ஹாக்கி தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி

Published On 2023-08-13 11:21 GMT   |   Update On 2023-08-13 11:41 GMT
  • இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
  • இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி 4-வது முறையாக பட்டம் வென்றுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் (2917.87) இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்து நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா ஆறாவது இடத்தில் உள்ளது. 7 முதல் 10வது இடங்களை ஸ்பெயின், அர்ஜென்டினா, மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன.

Tags:    

Similar News